மியன்மாரின் மோதல்கள் – கோட்பாட்டு அறிமுகம்
மியன்மாரின் மோதல்கள் – கோட்பாட்டு அறிமுகம் இந்தியா , பங்களாதேஷ் , சீனா , லாவோஸ் , தாய்லாந்து ஆகிய நாடுகளினால் சூழப்பட்டு தென்கிழக்கு தென்மேற்கு எல்லைகளாக முறையே வங்காள விரிகுடாவையூம் இந்து சமுத்திரத்தையூம் கொண்டுள்ள நாடு பர்மாவாகும் . சனத்தெகையைப் பெறுத்த வரையில் உலகின் 24 வது இடத்தினையூம் நிலப்பரப்பு அடிப்படையில் உலகில் 40 ஆவது இடத்தினையூம் பெற்று விளங்குகிறது . இத்துணை பெரிய நிலவளத்தினையூம் மனிதவளத்தினையூம் பர்மா கொண்டிருந்தாலும் உலக அரங்கில் பர்மா எப்போதும் முரண்பாடுகளின் தேசமாகவே காட்சியளிக்கிறது . இதற்குக் காரணம் பர்மாவில் காணப்படும் இனப்பல்வகைமையின் சமப்படுத்த முடியாத பிரிவினையாகும் . இங்கு இனம், மதம், மொழி அடிப்படையில் 135 இனக்குழுக்கள் வாழ்கின்றன . எவ்வாறெனினும் இவற்றை எட்டு பிரதான தேசிய இனங்களுக்குள் அடக்க முடியூம் . எனவே இத்தகு பல்வகைமை நிலவூம் நாட்டில் இனங்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தத் தவறுமிடத்தில் முரண்பாடுகள் ஏற்படுவதும் பின் அவை மோதல்களாக வளர்வதும் தடுக்க முடியாத ஒன்றே . பர்ம...