மனித உரிமைகள்


மனித உரிமைகள் எனும் விடயமானது இன்றைய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றதொரு விடயமாக உள்ளது. பல்வேறு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோரும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்போரும் தமக்கேற்றாற் போல் மனித உரிமை விடயங்களை வடிவமைப்புச் செய்துள்ளனர். அதே வேளை மனித உரிமை என்பது சமூகத்தோடு இணைந்து வளர்ச்சியுற்று இன்றைய நிலையினை அடைந்துள்ளது. இன்றும் மனிதவுரிமைகள் எனும் விடயமானது சமூகத்துடன் இணைந்தே அசைவுற்றுக் கொண்டுள்ளது. இதனால் மனித உரிமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதோர் விடயமாகவுள்ளது. இதன் காரணமாக அறிஞர்கள் மனித உரிமைகளுக்கு வேறுபட்ட வரைவிலக்கணத்தினை முன்வைக்கின்றனர்.

மனித உரிமை எனும் விடயத்தை விளக்க முற்படுகையில் மனிதன், உரிமை எனும் இரு விடயத்தினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். மனிதன் என்கின்ற பதமானது தேசியம், வாழிடம், பால், தேசம், இனம், நிறம், மதம், மொழி அல்லது இவை போன்ற வேறு நிலைகளைக் கடந்து இப் பூகோளத்தில் வாழும் அனைவரையும் குறிக்கிறது. மனிதர்கள் யாவரும் வேறுபாடு அற்றவர்கள் என்பதே இதன் உட்கிடக்கையாகும்.
ஆயினும் உரிமைகள் எனும் பதத்தினை இவ்வாறு இலகுவாக வரையறை செய்யமுடியாது. எவ்வாறாயினும் மிக இலகுவான முறையில் “அரசினாலும் சமூகத்தினாலும் அங்கீகரிக்கப்பட்ட தனிமனிதக் கோரிக்கைகளே உரிமைகள் எனக் கூறமுடியும்.” இவ் வரைவிலக்கணத்திலிருந்து உரிமைகள் என்பது மூன்று அடிப்படையான உள்ளடக்கங்களினைக் கொண்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. அவையாவன்
1. தனி மனிதக் கோரிக்கைகள்.
2. சமூக அங்கீகாரம்.
3. அரச அங்கீகாரம்  
மனிதர்கள் தமது வளமான வாழ்க்கைக்கும் சுதந்திரமான இருத்தலுக்கும் அவசியமான விடயங்களையே உரிமைகளாக அங்கீகரிக்கக் கோருகின்றனர். இதனால் உரிமைகள் என்பவை மனிதரின் நலன் சார்ந்த விடயமாக அமைகின்றன. ஆயினும் இவ் நலன் என்பது குறுகிய நலனாகவன்றி சமூகத்தின் பொது நலனை அடிப்படையாகக் கொண்டிருப்பது அவசியமாகிறது. அத்தகைய கோரிக்கைகளே சமூகத்தின் அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொள்ளும். தனிமனிதக் கோரிக்கைகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும் போது அவை விழுமியம்சார் உரிமைகளாக (ஆழசயட சுiபாவள) மாறும். அத்தகைய விழுமியங்களை அரசு அங்கீகரிக்கையில் அவை சட்ட அந்தஸ்த்தினைப் பெறுகின்றன. இதனால் இவை சட்ட உரிமைகள் (டுநபயட சுiபாவள) ஆகின்றன. இவ்வுரிமைகளைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் அரசினையே சாரும்.

மேற்கூறப்பட்ட வரைவிலக்கணத்தின் மூலமாக உரிமைகள் மனிதனின் நல்வாழ்வுக்கு அவசியமானவை, இவை சமூகத்தின் பொது நலனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதுடன் இவற்றுக்கு அங்கீகாரம் அரசினால் வழங்கப்படும் போது அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இவ் விடயங்களினை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அறிஞர்கள் மனித உரிமைகள் பற்றிக் கூறிய கருத்துக்களை ஆதாரமாகக்கொள்ள முடியும். “உரிமைகள் மனித வாழ்வின் நிபந்தனைகள் பொதுவாக இவையின்றி எம்மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாது.” என்று லஸ்கி கூறுவதுடன் “வளமான வாழ்வுக்கு அவசியமான வளமான அம்சங்களினை உரிமைகள் கொண்டுள்ளன” என கிராவஸ் (முசயரளளந) கூறுகிறார். மேற்படி அறிஞர்களின் கருத்தின் மூலம் மனித நல்வாழ்வுக்கும் சுதந்திரத்திற்கும் சமூக இருத்தலுக்கும் உரிமைகள் அவசியமான விடயங்களாக உள்ளன என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இத்தகைய உரிமைகள் தனிமனித நலன்களை அன்றி சமூகத்தின் பொது நலன்களை வெளிப்படுத்துவதாக அமைவது அவசியமாகிறது. இதனாலேயே “உண்மையான உரிமைகள் சமூகப் பொது நலத்தின் நிபந்தனைகள்” என கோபஸ் (ர்ழடிhழரளந) கூறுகிறார்.

மனித உரிமைகளை அங்கீகரிப்பதில் சமூகத்தில் தன்னிகரற்ற அதிகாரத்துடன் விளங்கும் அரசினது பங்கு முக்கியமாகிறது. இதனை “உரிமைகளின் உடனடி மூலம் அரசேயாகும் உரிமைகள் இம்மூலத்திலிருந்து வெளிவரவில்லையாயின் பூரண அர்த்தத்தில் அது உரிமையாக முடியாது.” எனும் பேக்கரின் கூற்றானது உறுதிப்படுத்துகிறது. அதாவது சட்ட உரிமைகளின் ஒரே மூலம் அரசேயாகும் என்பதுடன். அரசு தன் இறைமையைக் கொண்டே இவ்வுரிமைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால் அவை மீறப்படுகையில் அவற்றைப் பாதுகாக்கும் வல்லமையும் பொறுப்பும் அரசுக்கே உண்டு.
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை ஒன்றினைத்து, மனிதர்கள் என்பதால் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளே மனித உரிமைகள் என இலகுவாக வரையறுத்துக் கொள்ளலாம். இவ்வுரிமைகளை எவ்வித வேறுபாடுமின்றி மனிதர்கள் யாவரும் சமமாக அனுபவிப்பதற்கு உரித்துடையவராவர் என்பதுடன் இவ்வுரிமைகள் ஒன்றேடொன்று தொடர்புடையது, ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது, ஒன்றிலிருந்து ஒன்றினைப் பிரிக்க முடியாதுள்ளது. இத்தகைய உரிமைகள் வளர்ந்த வரலாறு மிகவும் நீண்டதாகும்.

1.2 மனித உரிமைகளின் வளர்ச்சி
மனித உரிமைகளின் தோற்றம் தொடர்பில் நிலையான கால வரையறையினைக் குறிப்பிடுவது இயலாத காரியமாகும். ஏனெனில் அது மனித சமூக வளர்ச்சியோடே தொடர்ந்தும் வளர்ச்சியுற்ற ஒன்றாகும். மனித உரிமை என்ற எண்ணக் கருவின் ஆரம்பத்தின் வேர்களினை பல்வேறு சமயக் கோட்பாடுகளிலிருந்து அடையாளப்படுத்தக் கூடியதாகவுள்ளது. மேலும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது 538ம் ஆண்டளவில் பபிலோனைக் கைப்பற்றிய பேர்சிய மன்னன் அங்கிருந்த அடிமைகளை விடுதலை செய்ததுடன் அனைத்து மக்களும் அவர்களது மதத்தினை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையினை வழங்கினான். இதுவே மனித உரிமைகளினை அனுபவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியுமாகும். இங்கிருந்தே உரிமைகள் இந்தியா, கிரேக்கம், உரோம் ஆகிய பகுதிகளைச் சென்றடைந்தன.
எவ்வாறெனினும் கிரேக்க நகர அரசுகளில் வாழ்ந்த பிரஜைகள் சட்டத்தின் முன் சமம் (ஐளழழெஅயை – நுஙரயடவைல டிநகழசந டயற), சமமான மரியாதை (ஐளழவழnயை – நுஙரயட சநளிநஉவ கழச யடட) சமமான பேச்சுச் சுதந்திரம் (ஐளழபழசயை – நுஙரயட கசநநனழஅ ழக ளிநநஉh) என்பவற்றைப் பெற்றிருந்தனர். அவ்வாறே கீழைத்தேய நாடுகளிலும் கூட ஒரு சிலர் இத்தகைய உரிமைகளினைப் பெற்றிருந்தனர். ஆயினும் ஆரம்ப காலத்தில் காணப்பட்ட இத்தகைய உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்ட உரிமைகளல்ல. மாறாக இத்தகைய உரிமைகளை சமூகத்தின் ஒரு சிறு பிரிவினரே அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய காலத்தில் நிலப்பிரபுத்துவ வீழ்ச்சியைத் தொடர்ந்து நிலப்பிரபுத்துவ சமூகம் முதலாளித்துவ சமூகமாக மாற்றமுற்றபோது பிரபுக்கள், பாப்பாண்டவர் எனும் இரு தரப்பினரிடம் காணப்பட்ட அதிகாரம் ஒன்றாக்கப்பட்டு அரசனின் கைகளுக்கு வந்தது. இத்தகைய நிலையில் அரசு சமூகத்தில் காணப்பட்ட அதிகாரமிக்க நிறுவனமானதுடன் மக்கள் தமது உரிமைகளை அரசிடமிருந்து பெறுவதற்கு ஆயத்தமாயினர். இதன் பின்பிருந்தே உரிமைகள் பற்றிய நவீன சிந்தனைகளும் தோன்ற ஆரம்பித்தன. எனவே மனித உரிமைகள் பற்றிய நவீன சிந்தனைகளின் ஆரம்பத்தினை ஐரோப்பிய மறுமலர்ச்சி, புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்கம் என்பவற்றோடு இணைந்தவகையில் காணமுடியும்.
உரிமைகளினை வெவ்வேறு போராட்டங்களின் மூலமாக மனிதன் அரசிடமிருந்து பெற்றுக் கொண்டான். இத்தகைய போராட்டங்களில் ஒன்றே 1215ல் ஜோன் மன்னனை மக்களின் உரிமைகளடங்கிய மகா சாசனத்தில் கையொப்பமிடும்படி நிர்ப்பந்தித்தது. இதுவே மக்னா கார்ட்டா (ஆயபயெ ஊயசவய) என அழைக்கப்படுகிறது. இவ் உரிமைகள் பட்டயமானது எதேச்சாதிகாரமாக கைது செய்வதையும் நியாயமற்ற வரிகளை மன்னன் விதிப்பதையும் தடை செய்தது. இதுவே பின்னாளில் பாராளுமன்றம் எனும் ஜனநாயக தாபனங்களின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்தது.
மதசார்பற்ற இயற்கைச் சட்டத்தின் எல்லைக்குள் மனித உரிமைக் கொள்கையினை வெளியிட்டவர்களில் தலைசிறந்து விளங்குபவர் ஜோன் லொக் ஆவார். அவர் தனது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் மனிதன் இயற்கை அருளிய சில உரிமைகளைப் பெற்றுள்ளான் எனக் கூறுகிறார். இதன்படி ஜோன் லொக் முன்னர் கூறப்பட்ட ஒருதரப்பினருக்கு மட்டும் உரித்தான உரிமைகளையோ உரிமைகள் தொடர்பாக இருந்து வந்த மத சார்புக் கொள்கைகளையோ ஆதரிக்கவில்லை. மாறாக இயற்கை நெறிக்காலத்தில் மனிதர்கள் யாவரும் சம உரிமையைப் பெற்றிருந்தனர் என்பது பற்றியே கூறுகின்றார். அந்தவகையில் உயிர் வாழ்தல், சுதந்திரமாக இருத்தல், சொத்து வைத்திருத்தல் போன்றன லொக் கூறும் இயற்கை உரிமைகளாகும். லொக்கினது இக்கருத்துக்களின் மூலமாக மனிதன் இயற்கையாக பெற்ற உரிமைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படையில் மன்னனின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த பாராளுமன்றம் அக்கால இங்கிலாந்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பவராக இருந்தார்.
இங்கிலாந்தில் 1688ல் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக குடிமக்கள் உரிமைகள் சட்டம் பிறந்தது. மன்னனின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டுக்கும் இங்கிலாந்தின் பாராளுமன்றின் அரசியல் உரிமைகளுக்கும் இடையிலான போராட்டமாகவே இது அமைந்தது. இப்புரட்சி இங்கிலாந்தின் ஐஐம் ஜேம்ஸ் மன்னனை அரச பதவியிலிருந்து அகற்றியது; அரசனைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்துக்கு உள்ள உரிமைகளையும் அரசியல் தன்மையுடைய கத்தோலிக்க சமயத்தை ஏற்கமறுப்பதற்கு இங்கிலாந்து மக்களுக்கு உள்ள உரிமைகளையும் உறுதிப்படுத்தியது.
மனித உரிமைகள் வரலாற்றில் பிறிதொரு கட்டம் அமெரிக்கப் புரட்சியும் பிரஞ்சுப் புரட்சியுமாகும். அமெரிக்காவில் தோன்றிய தேசியம் சார்ந்த இயக்கமானது மக்களின் சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவேயாகும். இதனாலேயே அமெரிக்கா சுதந்திரம் பெற்றதன் பின்னர் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட அமெரிக்காவின் சுதந்திர யாப்பானது அரசாங்க தாபனங்கள், அவற்றின் நியாயாதிக்கம், பிரஜைகளின் உரிமைகள் என்பவற்றினை உறுதிப்படுத்திய முதல் எழுதப்பட்ட யாப்பாக விளங்குகிறது. உரிமைகள் தொடர்பான விடயத்தில் அமெரிக்க யாப்பானது லொக்கின் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவும், அவரது கோட்பாட்டுக்கு விளக்கம் தருவதாகவும் அமைந்தது. மேலும் அமெரிக்க யாப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் பத்து திருத்தங்களும் குடியரசுகளின் அதிகாரங்களை வரையறுத்ததுடன் பிரஜைகள் வதிவாளர்கள், அமெரிக்காவுக்கு வருகை தருவோர் போன்றோரின் உரிமைகளை வலியுறுத்துவதாகவும் இருந்தது.
அமெரிக்கப் புரட்சியினது அனுபவத்தினை நேரடியாகப் பெற்ற தோமஸ் பெயின் எழுதிய “றைட்ஸ் ஒப் த மென்” எனும் நூல் பிரஞ்சுப் புரட்சிக்கு ஆதரவு தருவதாக அமைந்தது. மனித உரிமைகள் அடிப்படையில் அரசியல்த்திட்டம் அமைவதுடன் அரசியல் சமத்துவமும் சுதந்திரமும் கொடுக்கப்படுமானால் மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்த காலம் ஏற்படும் என பெயின் நம்பினார். பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமாக அமைந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பனவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பிரஞ்சுப் புரட்சியினது அடிப்படை ஆவணமான மனித, பிரஜைகள் உரிமைகள் தொடர்பான பிரகடனம் (னுநஉடயசயவழைn ழக வாந சுiபாவள ழக ஆயn யனெ ழக வாந ஊவைணைநn) பிரஞ்சுப் புரட்சியின், மனித உரிமை தொடர்பான அடிப்படை ஆவணமாக விளங்குகிறது.
இதனைத் தொடர்ந்து கௌரவமாக இருத்தலுக்கான உரிமை, சமத்துவ உரிமை என்பவற்றைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாக 1807ல் பிரித்தானியா தனது காலனிகளில் இருந்து அடிமை வர்த்தகத்தினை ஒழித்ததுடன் 1814ல் பிரிட்டி~; - பிரான்ஸ் அரசாங்கங்களுக்கிடையில் அடிமைத்தனத்தை இல்லாதொழிக்கும் பொருட்டு பரிஸ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் 1890ல் பிரசல்ஸ் மாநாட்டின் போது அடிமைத்தனத்துக்கு எதிரான ஒப்பந்தத்தில் பதினெட்டு நாடுகள் கைச்சாத்திட்டன. இதனைத் தொடர்ந்து 1901ல் தாபிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அலுவலகமானது (ஐவெநசயெவழையெட டுநடிழரச ழுககiஉந) தொழில் நிலைமையை மேம்படுத்துதல் தொடர்பாக செயற்பட்டது. வேர்சைல்ஸ் ஒப்பந்தத்தின் (வுசநயவல ழக ஏநசளயடைடநள) அடிப்படையில் தாபிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றியமானது (டுநயபரந ழக யேவழைn) 1919ல் உருவாக்கப்பட்டதும் சர்வதேச தொழிலாளர் அலுவலகமானது நாடுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக சர்வதேச தொழிலாளர் தாபனம் (ஐவெநசயெவழையெட டுயடிழரச ழுசபயnணையவழைn) என செயற்பட்டதுடன் 1926ல் அடிமை வர்த்தகத்தினை முற்றாக தடை செய்தது. மேலும் நாடுகளின் ஒன்றியமானது சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்தல் எனும் பிறிதொரு தளமும் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் ஏற்பட்ட இன்னுமொரு உயர்ச்சியாகும். அந்தவகையில் செஞ்சிலுவைச் சங்க தாபகரான ஹென்றி டூனன்ட் (ர்நசெல னுரயெவெ) 1864ல் முதலாவது ஜெனீவா சாசனத்தை அறிமுகப்படுத்தியது முதல்; யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர், பணயக் கைதிகள், போராளிகள், அரச இராணுவத்தினர் போன்றோரின் உரிமைகளினை பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் பின்வந்த காலப்பகுதியில் ஜெனீவா சாசனத்தில் சேர்க்கப்பட்டன.
தொடர்ந்தும் இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகள் மனித உரிமைகளின் பால் அதிக அக்கறை ஏற்படக் காரணமாயிற்று. இதன் விளைவாக உலக சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மதிப்பை மேம்படுத்துதல் போன்ற முக்கிய குறிக்கோளுடன் ஐக்கிய நாடுகள் சபையானது தோற்றுவிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்ததோடு மனித உரிமைகளை விருத்தி செய்தல், அமுல்ப்படுத்தல், பாதுகாத்தல் போன்றன சர்வதேசமயப்படுத்தப்பட்டது. இதனால் மனித உரிமைகள் வரலாற்றில் ஐக்கிய நாடுகள் தாபனம் தாபிக்கப்பட்டமையானது ஓர் மணிமகுடமாகும். மனித உரிமைகளை பாதுகாத்தல், விருத்தி செய்தல் என்பவற்றுடன் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முன்னுரையானது பின்வருமாறு வெளிப்படுத்துகிறது; “ஐக்கிய நாடுகள் தாபன மக்களாகிய நாம் அடிப்படை மனித உரிமைகள் மீதும் மானிடத்துவத்தின் கௌரவத்தின் மீதும் மதிப்பின் மீதும் பெரிய, சிறிய அரசுகளினதும் ஆண், பெண் இருபாலாரினதும் சம உரிமைகள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தவும்… நாம் உறுதி பூணுகின்றோம்.”
எனவே 1945ல் சான்பிரஸ்கோ நகரில் ஐக்கிய நாடுகள் சாசனம் கைச்சாத்திடப்பட்ட போது மனித உரிமைகளை மேம்படுத்தும் வகையில் ஓர் சாசனம் உருவாக்கப்படவும் வழிவகுக்கப்பட்டது. இதன்படி 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழு ஒன்று தாபிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் பொதுச்சபையானது தனது முதல் அமர்வின் போது சர்வதேச உரிமைகள் தொடர்பான சாசனம் ஒன்றினை உருவாக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவைக் கேட்டுக் கொண்டது. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரும் இக்குழு ஆரம்பத்தில் உபயோகிக்கத்தக்க வாசகங்களின் குறிப்புருவமொன்றினை ஆக்கியிருந்தார். 1947 யூன் மாதத்தில் கூடிய ஆணைக்குழுவானது இப்பத்திரத்தை யாவருத் சேர்ந்து திருத்தியமைப்பதற்குப் பதிலாக இப்பணியை ஒருவரே செய்தல் நலமெனக்கருதி பிராஸ் தேசப்பிரதிநிதியான பேராசிரியர் ரேனே காசின் (சுநநெ ஊயளளin) அவர்களிடம் இப்பணியினை ஒப்படைத்தது. அவர் 44 கூறுகள் மற்றும் முன்னுரை என்பவற்றை கொண்ட பத்திரமொன்றினைத் தயாரித்தார். இவ்வாசகங்கள் பற்றி விவாதித்த மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அதனைத் திருத்தியமைத்து ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பித்தது. ஐக்கிய நாடுகள் சபையானது பொதுச்சபையின் 217 யு(ஐஐஐ) தீர்மானத்தின் படி 1948 டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்தது. இது ஓர் முன்னுரையையும் முப்பது உறுப்புரைகளையும் கொண்டு காணப்படுகிறது.
மனித உரிமைகள் இயக்க வரலாற்றில் மனித உரிமைகளினைப் பலப்படுத்த எடுத்த உலகலாவிய நடவடிக்கையாக மனித உரிமைப் பிரகடனம் விளங்கியது எனலாம். இது உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமை நியமங்களை வகுத்தது. பல்வேறு அரசுகள் அவ் உரிமைகளை ஏற்று நடைமுறைப்படுத்தின. மனித உரிமை சாசனத்தில் உள்ள விடயங்கள் சர்வதேச ரீதியில் பல்வேறு சட்டங்கள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் பிரதிபலித்தன. மனித உரிமைகள் வரலாற்றில் மனித உரிமைகள் பிரகடனம் பெறும் முக்கியத்துவத்தை எலினர் ரூஸ்வெல்ட் (நுடநயழெச சுழழளநஎநடவ) அவர்களின் வார்த்தைகளில் கூறுவதாயின் “இது சர்வதேச மக்னா கார்ட்டா இதனை உலகில் வாழும் எல்லா மனிதரும் எவ்விடத்திலும் அனுபவிக்க முடியும்” எனக் கூறினார். இவ் மனித உரிமைகள் பிரகடனம் சர்வதேச மென் சட்டமாகவும் (ளுழகவ டுயற) விளங்குகின்றது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநாடுகள்; மூலம் மனித உரிமைகளை பாதுகாத்து, மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய மாநாடுகள்; பலவற்றுக்கு ஐக்கிய நாடுகள் சபையே ஆரம்ப கர்த்தாவாக இருந்ததுடன் மாநாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நாடுகள் அவற்றுக்கு மதிப்பளிக்கும் கடப்பாட்டினையும் கொண்டிருந்தன. இத்தகைய  மாநாடுகள், ஒப்பந்தங்களாக்
• சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான மாநாடு
• சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கான முதலாவது விருப்புரிமைப் பின்னேடு
• சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கான இரண்டாவது விருப்புரிமைப் பின்னேடு
• பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான மாநாடு
• பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மாநாடு தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு
• அனைத்து வகையான இன பாரபட்சங்களையும் இல்லாதொழித்தல் தொடர்பான மாநாடு
• பெண்களுக்கெதிரான அனைத்து வகையான இன பாரபட்சங்களையும் இல்லாதொழித்தல் தொடர்பான மாநாடு
• பெண்களுக்கெதிரான அனைத்து வகையான இன பாரபட்சங்களையும் இல்லாதொழித்தல் தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு
• சித்திரவதைகள் மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற, கௌரவமற்ற நடத்துகைகள் மற்றும் தண்டணைகளுக்கு எதிரான மாநாடு
• சித்திரவதைகள் மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற, கௌரவமற்ற நடத்துகைகள் மற்றும் தண்டணைகளுக்கு எதிரான மாநாடு தொடர்பான விருப்பத்துக்குரிய பின்னேடு
• சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாடு
• ஆயுத வன்முறையில் சிறுவர்களை தவிர்த்தல் தொடர்பான விருப்பத்திற்குரிய பின்னேடு
• வெளிநாடுகளில் தொழில் புரிவோரையும் அவர்தம் குடும்ப உறுப்பினரையும் பாதுகாத்தல் தொடர்பான மாநாடு
• விசேட தேவையுடையோர் தொடர்பான மாநாடு
• விசேட தேவையுடையோர் தொடர்பான மாநாட்டின் விருப்பத்திற்குரிய பின்னேடு
• காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச மாநாடு
என்பவற்றினைக் கூறமுடியும்.
உரிமைகளினை பிராந்திய அடிப்படையில் பாதுகாக்கும் வகையில் பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அமைப்புக்கள் உலகலாவிய ரீதியில் தோற்றம் பெற்றமையும் உரிமைகள் வளர்ச்சியின் பிறிதொரு கட்டமாகும். இத்தகைய அமைப்புகளுள் ஐரோப்பிய பேரவை, அமெரிக்க அரசுகளின் தாபனம், ஆபிரிக்க ஒன்றிய தாபனம் என்பன முக்கியமானவையாகும். இவை மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், தொடர்பில் தமக்கென விசேட பொறிமுறைகளினைக் கொண்டுள்ளன. அத்துடன் இம் மூன்று பிராந்திய அமைப்புக்களும் முற்றிலுமாக அரசுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளன. ஆசியப் பிராந்தியத்திலும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 1986ல் மனித உரிமைகள் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டதுடன் மக்கள் பட்டயம் (Pநழிடந’ள ஊhயசவநச) எனும் உரிமைகள் தொடர்பான பட்டயத்தையும் கொண்டிருந்தாலும் இவை முன்னைய பிராந்திய அமைப்புக்களைப் போன்று அரசாங்கங்களோடு தொடர்புபட்டவையல்ல.
மேற்படி விடயங்களினைத் தொகுத்து நோக்கும் போது உரிமைகள் மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் மூலமாக அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றவையாகும். அவற்றை அரசுகளே பாதுகாக்கவும் செய்தன. ஆயினும் உரிமைகள் பற்றிய விடயமானது இன்று உள்நாட்டு விடயமாகமட்டும் இருக்கவில்லை. உரிமைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட சர்வதேச தாபனங்கள், அவற்றின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள், சாசனங்கள், மாநாடுகள் போன்றன உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்கள் உருவாக்கப்பட காரணமாக இருந்தன. இதனால் இன்றைய நிலையில் மனித உரிமைகள் தொடர்பான விடயமானது சர்வதேச நியாயாதிக்கத்தினுள் வந்துள்ளன. எனவே உரிமைகள் தொடர்பான எத்தகைய பிரச்சினையும் உள்நாட்டு பிரச்சினையாக மட்டும் இருப்பதில்லை.          
1.3 உரிமைகளின் வகைகள்
பொதுவாக உரிமைகளினை இயற்கை உரிமைகள் சிவில் உரிமைகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். இயற்கை உரிமைகள் என்பவை மனிதன் பிறப்பிலேயே பெற்றுக் கொள்ளும் உரிமைகளாகும். இவை கடவுள் மனிதருக்கு அருளிய உரிமைகள் எனப்பட்டன. இத்தகைய உரிமைகளினை அரசுகள் அங்கீகரிக்கும் போது அவை சிவில் உரிமைகள் ஆகின்றன. இவை மனித வாழ்க்கையை அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாக்க உதவும் உரிமைகளாகும். இவ்வாறாக ஆரம்பத்தில் காணப்பட்ட போதும் மனித உரிமைகளின் வளர்ச்சிப் போக்கில் அவை மேலும் பல பகுதிகளாக வகுக்கப்பட்டன எனலாம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தையும் அதன் பின்னேடுகளினையும் அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் என்றும் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் என்றும் உரிமைகளை இரு வேறு பகுதிகளுக்குள் உள்ளடக்கலாம். மனித உரிமைகள் பிரகடனத்தின் 3 – 21 வரையான உறுப்புரையில் கூறப்படும் உரிமைகளையும் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான பின்னேடுகளில் வெளிப்படுத்தப்படும் உரிமைகளையும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் எனும் வகுதிக்குள் அடக்க முடிவதுடன் மனித உரிமைகள் சாசனத்தின் 22 – 28 வரையான உறுப்புரைகளில் வெளிப்படுத்தப்படும் உரிமைகளையும் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பின்னேடுகளில் வெளிப்படுத்தப்படும் உரிமைகளையும் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் எனும் வகைக்குள்ளும் அடக்கலாம்.
உரிமைகளினைப் பண்பினை அடிப்படையாகக் கொண்டு சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள், சமூகப் பொருளாதார, கலாசார உரிமைகள் எனவும் வகைப்படுத்தலாம். சிவில் உரிமைகள் என்பவை அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான தலையீடுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறது. பாதுகாப்பு, சுதந்திரம் போன்றன சிவில் உரிமைகளுக்கு உதாரணங்களாகும். தேர்தலில் போட்டியிடல், பேச்சுச் சுதந்திரம், கூட்டம் கூடுதல், அச்சுரிமை போன்ற அரசியல் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கான உரிமைகள் அரசியல் உரிமைகளாகும். அத்துடன் கல்விக்கான உரிமை, தொழில் உரிமை, மதம், மொழி, பண்பாடு, கலாசாரம் போன்றவற்றினை அனுபவித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான கோரிக்கைகள் சமூகப், பொருளாதார, கலாசார உரிமைகளாகும்.
உரிமைகளினை அனுபவிக்கும் தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு தனிநபர் உரிமைகள், குழு உரிமைகள் (ஊழடடநஉவiஎந சுiபாவள) என உரிமைகளை மேலும் இரு வகையினதாக வகைப்படுத்தலாம். தனிநபர் சார்ந்துள்;ள உரிமைகளான சுகாதாரம் வசதி, பாதுகாப்பு, தொழில் வாய்ப்பு போன்றன தனிநபர் உரிமைகளாகும் (ஐனெiஎனைரயட சுiபாவள). குறிப்பிட்டதொரு நலிவுற்ற குழுவினரின் நலன்களை உயர்த்துவதை  அடிப்படையாகக் கொண்ட உரிமைகளை குழு உரிமைகள் (ஊழடடநஉவiஎந சுiபாவள) எனக் கூறலாம். பெண்கள், சிறுவர்கள், நலிவுற்ற சமூகத்தினருக்கான உரிமைகள் போன்றன குழு உரிமைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
உரிமைகள் இயங்குநிலையினைக் கொண்டவை இதனால் இவை பல நூற்றாண்டு காலமாக வளர்ந்த வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு இவற்றை காரல் வெசாக் எனும் அறிஞர் மூன்று தலைமுறை உரிமைகளாக வகைப்படுத்துகிறார். முதலாம் தலைமுறை உரிமைகள் என்பவை சிவில் - அரசியல் உரிமைகளாகும். இவை இயற்கை உரிமைகளினது ஆரம்ப வடிவமாக அமைந்ததுடன் 17ம் நுற்றாண்டில் இடம்பெற்ற ஆங்கிலப் புரட்சி, 18ம் நூற்றாண்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சி, பிரஞ்சுப் புரட்சி என்பவற்றின் அடிப்படை நோக்கமாக அமைந்ததுவும் இவ் சிவில் உரிமைகளினை வென்றெடுப்பதேயாகும். இத்தகைய உரிமைகளுக்கான போராட்டம் 19ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. இத்தகைய உரிமைக் கோரிக்கைகளின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது “சுதந்திரம்” என்பதேயாகும்.
அதாவது மக்களின் தனிமனித சுதந்திரத்தினை அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாத்தல் என்பதுவே இக்காலகட்ட உரிமைகள் தொடர்பான கோசங்களின் பின்னணியில் இருந்த முக்கிய கருப்பொருளாகும்.
முதலாம் தலைமுறை உரிமைகளினை உடலியல் மற்றும் சிவில் பாதுகாப்பு (Phலளiஉயட யனெ ஊiஎடை ளுநஉரசவைல) சார்ந்தவை எனவும் சிவில் அரசியல் சுதந்திரம் (ஊiஎடை – Pழடவைiஉயட டுiடிநசவல) சார்ந்தவை எனவும் மேலும் இரண்டாக வகைப்படுத்தலாம். இதில் முதல் வகையில் சித்திரவதை, அடிமைத்தனம், மனிதாபிமானமற்ற நடத்துகை போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், எதேச்சாதிகார கைதிலிருந்து விடுபடல், சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படல் போன்ற உரிமைகள் உள்ளடங்கும். இரண்டாம் வகையில் சிந்தனை செய்தல், மனட்சாட்சியையும் மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரம், ஒன்றுகூடல் சுதந்திரம், அரசியலில் பங்குபற்றுவதற்கான சுதந்திரம் என்பவற்றினை உள்ளடக்கலாம்.
மக்களின் சமூக பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு தொடர்புடைய உரிமைகள் இருபதாம் நூற்றாண்டிலிருந்து வளரத்தொடங்கின. இவை இரண்டாம் தலைமுறை உரிமைகள் எனப்பட்டன. 1945ன் பின்னர் ஏற்பட்ட இத்தகைய உரிமைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலி~ சித்தாந்தங்களே ஆகும். இத்தகைய உரிமைகள் “சமத்துவம்” எனும் விடயத்தினை அடிப்படையாகக் கொண்டமைந்தது. இவ் உரிமைகளினை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உரிமைகள் (Pசழஎளைழைn ழக பழழன அநநவiபெ ளழஉயைட நெநனள)இ பொருளாதார தேவையினை பூர்த்தி செய்வதற்கான உரிமைகள் (Pசழஎளைழைn ழக பழழன அநநவiபெ நஉழழெஅiஉ நெநனள) என மேலும் இரண்டாக வகைப்படுத்தலாம். முன்னையதில் வாழிடம், சுகாதாரப் பாதுகாப்பு, போசாக்கு, கல்வி போன்ற உரிமைகளும் பின்னையதில் தொழிலும் நியாயமான கூலியும், வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு என்பனவும் உள்ளடங்கும்.
1945இல் உரிமைகள் தொடர்பில் மேலுமொருபடி முன்னேற்றம் ஏற்பட்டது. இவையே மூன்றாம் தலைமுறை உரிமைகள் எனப்பட்டன. இக்காலத்தில் நிகழ்ந்த காலனித்துவ விடுதலையும் தேசிய விடுதலை இயக்கத்தினது வளர்ச்சியும் இவ்வுரிமைகளுக்கு அடிப்படையாய் அமைந்தன. “சகோதரத்துவம்” எனும் கோசத்தினை அடிப்படையாகக் கொண்டு குழு உரிமைகள் தோற்றம்பெற்றன. அபிவிருத்தி உரிமைகள், சுயநிர்ணய உரிமைகள் போன்றனவே மூன்றாம் தலைமுறை உரிமைகளாகின்றன. இவ்வுரிமைகளில் மக்களின் அரசியல் நிலை மற்றும் சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்தியை உள்ளடக்கிய உரிமைகள், சிறுபான்மையினர் தம் கலாசாரம், மொழி, மதம் போன்றவற்றினை அனுபவிப்பதற்கான உரிமைகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன. எவ்வாறெனினும் குழு உரிமைகள் தனிமனித உரிமைகளினை பலவீனப்படுத்துகின்றன என்ற வகையில் குழு உரிமைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சர்வதேச உரிமைகள் பட்டயத்தின் அடிப்படையில், பண்பு அடிப்படையில், அனுபவிப்பவர்களின் அடிப்படையில், உரிமைகளின் வளர்ச்சிக் கட்டங்களின் அடிப்படையில் உரிமைகளை எவ்வாறு வகைப்படுத்தி நோக்கினாலும் மனிதர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு அனைத்து உரிமைகளும் அவசியமாகும். இதனாலேயே ஐக்கிய நாடுகள் தாபனமானது உரிமைகள் மனிதரிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனக் கூறுவதுடன் அவை ஒன்றில் ஒன்று பரஸ்பரம் தங்கியுள்ளவை எனவும் கூறுகிறது.
 

United Nations Human Right, What are human rights? , http://www.ohchr.org/EN/Issues/Pages/WhatareHumanRights.aspx


Johari J.C, Contemporary Political Theory, Sterling Publishers, Page 228


ibid.,p.227


Fernando,L, 2002,  Human Rights Politics and States – Burma, Cambodia, Sri Lanka, Social Scientist Association, Colombo, Page8


fPjnghd;fyd;>I> 1993> murwptpay; mwpKfk;> CVRntspaPL> gf;fk;- 81


ibid.


ibid.,p.87


ibid.,p.81


United Nations Human Right, What are human rights? , http://www.ohchr.org/EN/Issues/Pages/WhatareHumanRights.aspx


Gautam,A, 2001, Human Rights and Justice System, APH Publication Corporation, New Delhi , Page-37


United for Human Rights, A Brief History of Human Rights, http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/cyrus-cylinder.html


Gautam,A, op.cit., p.37


ntNuf;fu;>rh> 1972> murpay; nfhs;if tsu;r;rp> fy;tpntspaPl;Lj; jpizf;fsk;> gf;fk;


ibid.


[arpq;f>Nf.vr;> 1976> murwptpay;> fy;tp ntspaPl;Lj; jpizf;fsk;> gf;fk;- 14


ntNuf;fu;>rh> op.cit., p.43


[arpq;f>Nf.vr;> op.cit.


ntNuf;fu;>rh> op.cit., p.44


ibid.,p.45


ibid.,p.89


ibid.,p.90


United for Human Rights, A Brief History of Human Rights, http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/declaration-of-independence.html


ntNuf;fu;>rh> op.cit., p.111


Gautam,A, op.cit., p.45


Heywood, A, 2011, Global Politics, Palgrave Macmillan , Page- 45


ICRC, Development of modern international humanitarian law, 30.05.2010, http://www.icrc.org/eng/who-we-are/history/since-1945/history-ihl/overview-development-modern-international-humanitarian-law.htm


If;fpaehLfs; jhgdk; gw;wpa mbg;gilj; jfty;fs;> 1994> If;fpa ehLfs;> epA+Nahu;f;> gf;fk;- 2


Rg;gpukzpak;> 1964> mfpy cyf kdpj cupik ntspaPL> mur fUknkhopj; jpizf;fsk;>gf;fk;- 39


United for Human Rights, A Brief History of Human Rights, http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/the-united-nations.html


nkd; rl;lq;fs; vd;git ru;tNjr rl;lj;jpd; xU tifahFk;. ,it ehLfisf; rl;l uPjpahf fl;Lg;gLj;Jk; jpwd; mw;wit. Center on Globalization, Three Things Distinguish Hard from Soft Law, http://clg.portalxm.com/library/keytext.cfm?keytext_id=66


United Nations Human Rights, THE CORE INTERNATIONAL HUMAN RIGHTS INSTRUMENTS and their monitoring bodies, http://www.ohchr.org/EN/ProfessionalInterest/Pages/CoreInstruments.aspx


jkpo;khwd;>tp.up1998> xg;gPl;Lr;rl;lk; - xU rpy rpe;jidfs;> kJup kyu;tfk;> nfhOk;G, gf;fk;- 7


United for Human Rights, International Human Rights Law, http://www.humanrights.com/what-are-human-rights/international-human-rights-law-end.html


If;fpaehLfs; jhgdk; gw;wpa mbg;gilj; jfty;fs;> op.cit., p.1-71


Aung Myo Min, Know Your Rights, http://www.aspbae.org/bldc/sites/default/files/ppt/Know%20Your%20Rights.ppt


ibid.


Globalization101, Three Generations of Human Rights, 2013, http://www.globalization101.org/three-generations-of-rights


ibid.


Heywood, Andrew, Global Politics


Aung Myo Min, Know Your Rights, http://www.aspbae.org/bldc/sites/default/files/ppt/Know%20Your%20Rights.ppt


Globalization101, Three Generations of Human Rights, 2013, http://www.globalization101.org/three-generations-of-rights


jkpo;khwd;>tp.up> 1995> ru;tNjrk;: rkfhy rpe;jidfs;> ftpjh gjpg;gfk;> kJiu> gf;fk; - 66


United nations Human Right, What are human rights? , http://www.ohchr.org/EN/Issues/Pages/WhatareHumanRights.aspx


 

Comments

Popular posts from this blog

இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்

பிரித்தானிய பாராளுமன்றம்