இந்தியாவின் பஞ்சாயத்து முறை – ஓர் அறிமுகம்
இந்தியாவின் பஞ்சாயத்து
முறை – ஓர் அறிமுகம்
ஐனநாயகம்
என்பது ஓர் ஆட்சி முறை
என்ற வகையில் அது வெற்றிகரமாக
இயங்குவதற்கு மக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமானதாகும். அந்தவகையில் நவீன அரசுகள் கொண்டுள்ள
பாரிய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மூலமாக மக்களின் அரசியல்
பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்க்க முடியாத நிலையில்
உள்@ர் ரீதியாக உள்ள
அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்கி அவர்கள் தமது
பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளத்தக்க வகையில் வசதிகளை ஏற்படுத்திக்
கொடுப்பதனை இன்றைய அனைத்து ஐனநாயக
அரசுகளிலும் காணமுடியும்.
அந்தவகையில்
மக்களால் உருவாக்கப்படுகின்ற அடிமட்ட அமைப்புகளுக்கு அதிகாரத்தை
வழங்குவதன் மூலமாக மக்களின் அரசியல்
பங்குபற்றுதலை உயர்த்த முடிவதுடன் மக்கள்
தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளைத் தமது திட்டங்கள் மூலமாகவே
நிறைவேற்றிக் கொள்வதுடன் மத்தியிலிருந்து மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு உற்பட்டு
இறுதி மட்டத்திற்கு வருவதும் தடைப்படுகிறது. இதனால் அபிவிருத்தியும் துரிதப்படுத்தப்படுகிறது.
இத்தகைய விடயங்களைக் கருத்திற் கொண்டு இந்திய யாப்புக்கு
உள்வாங்கப்பட்ட விடயமே பஞ்சாயத்து இராச்சிய
முறையாகும். ஓர் நாட்டில் மக்களின்
பங்கேற்பின் முலமாக ஐனநாயகத்தினை பலப்படுத்த
உதவவும் இவ்விடயங்கள் உள்@ர் சுயாட்சி
எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்தியாவைப்
பொறுத்த வரையில் பஞ்சாயத்துக்கள் மன்னர்கள்
காளமளவுக்கு பழமைவாய்ந்த விடயமாகும். சுதந்திர இந்தியாவிலும் மகாத்மா காந்தியினால் பஞ்சாயத்து
முறைமை ஆதரிக்கப்பட்டது. மகாத்மாகாந்தியினது
பார்வையில் சுதந்திரம் என்பது வெறும் அரசியல்
சுதந்திரம் மட்டுமல்ல அவற்றைத் தாண்டிய கிராமிய, பொருளாதார, சமூக, அரசியல் சுதந்திரம் என்பதுதான் உண்மையான சுதந்திரம் என மகாத்மா காந்தி
நம்பினார். இத்தகைய சுதந்திரத்தை தக்கவைத்துக்
கொள்வதற்காக கிராமங்களுக்கு அதிகாரத்தை வழங்கி கிராமிய சுயாட்சியை
பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன் மகாத்மா
காந்தி மட்டுமே அக்காலத்தில் கிராமிய
சுயாட்சி பற்றி நம்பியவராகவும் காணப்பட்டார்.
ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக திகழ
வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாகவிருந்தது. இதன்
மூலமே பெற்ற சுதந்திரத்தை தக்கவைத்துக்
கொள்ள முடியும் என்பதில் காந்தி நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆயினும்
இந்தியாவின் அப்போதைய நிலையினைக் கருத்திற் கொண்டு யாப்பினை வரைந்தோரால்
மகாத்மா காந்தியின் சுயராச்சியம் (Swaraj) பற்றிய சிந்தனைகளுக்கு செயல்
வடிவம் கொடுக்க முடியவில்லை. சுதந்திரமடைந்த
போது சுதந்திர இந்தியாவினை வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் உள்@ரில் காணப்பட்ட பல்வேறு
அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையிலும் பலம் வாய்ந்த மத்திய
அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டதுடன் அதன்
கீழ் மாநில அரசாங்கங்களையும் கொண்ட
புதியதோர் வகையான சமஸ்டி முறைமை
அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இம்முறையின் கீழ்
மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தினை குவித்து வைத்திருத்த அரசாங்க அமைப்புகளால் இந்தியாவின்
அனைத்துப் பகுதிகளையும் செயற்றிறனுடன் ஆட்சிப்படுத்த முடியாது போனது. குறிப்பாக அதிக
மக்கள் செறிந்து வாழும் கிராமியப் பகுதிகளை
உரிய முறையில் கவனிக்க முடியாமற் போனது.
இத்தகையதோர் நிலையில் தான் ஏற்கனவே கிராமிய
மட்டத்தில் இயங்கிவந்த பஞ்சாயத்துக்கள் மீதும் மகாத்மா காந்தியினது
சுயராட்சிய (Swaraj) கொள்கை மீதும் இந்திய
அரசின் கவணம் ஈர்க்கப்பட்டது.
எனவே
இதுபற்றி ஆராயயும் பொருட்டு 1957ம் ஆண்டு பல்வந்ராய்
மேத்தா குழுவானது அமைக்கப்பட்டு உள்@ராட்சி தொடர்பான
அறிக்கையினை சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்குழு தனதறிக்கையில்
நிர்வாக ரீதியாக அதிகாரத்தை பரவலாக்குதல்,
இப்பரவலாக்கல் மூலம் அமைக்கப்படும் நிர்வாக
அமைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருத்தல், இப்பிரதிநிதிகளைக் கொண்டே கிராமிய அபிவிருத்தியை
ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில்
பிரஸ்தாபித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நேருவின்
ஆட்சிக்காலத்தில் பஞ்சாயத்து இராச்சிய செயன்முறையில் எழுர்ச்சிப்போக்கினை காணமுடிந்தாலும் பஞ்சாயத்துக்கள் யாப்பு ரீதியாக அங்கிகரிக்கப்படவில்லை. நேருவின்
மரணத்தின் பின் ஏற்பட்ட உள்@ர் அரசியல் மாற்றங்களினால்
குறிப்பாக காங்கிரஸ் தலைமைத்துவத்தினுள் ஏற்பட்ட முரண்பாடுகள், மாநில அதிகாரங்கள்
மத்தியினால் அபகரிக்கப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து மாநில
அரசாங்கங்கள் பஞ்சாயத்துக்களின் அதிகாரங்களை பறித்துக் கொண்டமை போன்ற காரணங்களால்
பஞ்சாயத்து முறைமை செயலற்றுப்போனது.
அதனைத்
தொடர்ந்து 1977இன் பின்னர் பஞ்சாயத்து
முறைமை பற்றிய கோசங்கள் மீளெழத்
தொடங்கின. 1977ல் ஜனதா கட்சி
ஆட்சியின் போது பஞ்சாயத்து முறைமை
பற்றி ஆராயயும் பொருட்டு அமைக்கப்பட்ட அசோக் மேத்தா குழு
தனது அறிக்கையில் “பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியல் சாசனத்தின் மூலம்
அதிகாரத்தினை வழங்கி, அதற்கு மத்திய
அரசைப்போல் ஒரு அரசாங்கம் எனும்
அந்தஸ்தினைத் தர வேண்டும்” என்ற
விதந்துரைத்திருந்தமையே இதற்குக் காரணமாகும். இவற்றின் விளைவாக 1989 மே 16ல் புதிய
பஞ்சாயத்து முறைமை பற்றிய மசோதா
மாநிலங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியைத் தழுவியது. மாநிலங்களின் அதிகாரத்தை இம்மசோதா மூலம் மத்தியரசு கட்டுப்படுத்த
முயல்கிறது எனும் அடிப்படையிலேயே மாநிலங்கள்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எவ்வாறெனினும் அம்மசோதாவில் சில திருத்தங்கள் மெற்கொள்ளப்பட்டு
குறித்த மசோதாவானது 1992ல் யாப்பின் 73வது
திருத்தச்சட்டமாக மசோதா மக்களவையால் அங்கிகரிக்கப்பட்டது.
73வது
சட்டத்திருத்த மசோதா மத்தியினால் நிறைவேற்றப்பட்டதைத்
தெடர்ந்து 1994 ஏப்ரல் 24க்குள் ஏனைய மாநிலங்களும்
பஞ்சாயத்து அமைப்பினைத் தாபிப்பதற்கான சட்ட மூலத்தினை கொண்டுவந்து
விட்டன. யாப்பு ரீதியாக பஞ்சாயத்துக்கள்
மாநில விடயம். எவ்வொரு மாநிலமும்
தனது தனிப்பட்ட அரசியல், பொருளாதார நிலைக்கமைய அதனை ஏற்றுக் கொள்கிறது.
அதனால் எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியிலமைந்த
பஞ்சாயத்து அமைப்புக்களைக் காணமுடிவதில்லை. ஆயினும் பஞ்சாயத்துக்களின் கட்டமைப்பைப்
பொறுத்தவரையில் பஞ்சாயத்துக்கள் மூன்று அடுக்கினைக் கொண்டதாக
காணப்படுகின்றது.
இதில்
முதல் நிலையில் காணப்படுவது கிராமிய பஞ்சாயத்துக்களாகும். இவை கிராம
சபைகளில் அங்கத்துவம் வகிக்கும் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் 5 – 30 வரையான
உறுப்பினர்களைக் கொண்டு காணப்படுகிறது. குறிப்பிட்ட
கிராமிய எல்லைக்குள் வாழும் வாக்காளர்கள் இத்தேர்தலில்
வாக்களிக்க முடியயும். கிராமிய பஞ்சாயத்தில் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் பெண்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது ஓர் முக்கிய அம்சமாகும்.
கிராமிய மக்களால் தெரிவூ செய்யப்பட்டவருள் இருந்து
ஒருவர் இதன் தலைவராக தெரிவு
செய்யப்படுவார். கிராமிய பஞ்சாயத்துக்கள் தம்முடைய
செயற்பாடுகள் தொடர்பில் கிராமிய சபைகளுக்கு பொறுப்புக்
கூற கடைமைப்பட்டுள்ளன.
கிராமிய
வீதிகளையும் சந்தைகளையும் அமைத்தல், புனர் நிர்மாணம் செய்தல், வீதி விளக்குகளை பராமரித்தல், வரிகளை அறவிடுதல், கிராமிய
பிறப்பு, இறப்பு, திருமணப்பதிவுகளை பேணிப்
பாதுகாத்தல், கிராமிய மக்களின் சுகாதாரத்தையயும்,
ஆரோக்கியத்தையும் போணும்
திட்டங்களை முன்னெடுத்தல், கிராம சபைகளின் கூட்டங்களை
ஏற்பாடு செய்தல் போன்றன இதன்
பணிகளாகும். கிராமிய பஞ்சாயத்துக்கள் கிராமங்களிலிருந்து
அறவிடப்படும் வரிகள் மூலமாகவும், மாநில
அரசு மற்றும் ஜில்லா பஞ்சாயத்திலும்
இருந்த கிடைக்கப் பெறும் உதவிகள் மூலமாகவும்
தமக்குரிய நிதியினைப் பெற்றுக் கொள்கின்றன.
கிராமிய
பஞ்சாயத்துக்களுக்கு மேல் நிலையில் தொகுதி
மட்ட பஞ்சாயத்துக்கள் (Block-level Panchayats) காணப்படுகின்றன.
ஒவ்வொரு மாநிலங்களிலும் இவை வேறு பெயர்
கொண்டு அழைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆந்திராவில் மண்டல் பிரஜா பரி~த் எனவூம். மண்டல்
பஞ்சாயத் என கர்நாடகாவிலும், தாலுகா
பஞ்சாயத் என குஜராத்திலும் அழைக்கப்படுகின்றன.
இதில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும்,
நியமிக்கப்படும் உறுப்பினர்களும், பதவி வழியாக உறுப்புரிமை
பெறுவோரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
தொகுதிமட்ட பஞ்சாயத்துக்கள் 20 – 60 உறுப்பினர்களைக் கொண்டு காணப்படும். இவர்களின்
பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும்.
விவசாயத்துறையின்
அபிவிருத்திக்கான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், சிறிய சுகாதார நிலையங்களையும்,
முன்பள்ளிகளையும் அமைத்தல், வீதி மற்றும் வடிகால்
திட்டங்களை அமைத்தலும் புனரமைப்புச் செய்தலும், சிறிய ரக கைத்தொழில்களை
விருத்திசெய்தல், கூட்டுறவு சங்கங்களை அமைத்தல் போன்றன பஞ்சாயத்துக்களின் பிரதான
தொழிற்பாடாக காணப்படுகின்றது. மாநில அரசிடமிருந்து பெறும்
உதவிகள், கடன்கள் என்பன இவற்றின்
பிரதான நிதி மூலங்களாகும்.
பஞ்சாயத்து
இராச்சிய கட்டமைப்பினில் உயர் மட்டத்தில் காணப்படுபவை
மாவட்ட மட்ட (District
Level) பஞ்சாயத்துக்களாகும்.
இவை ஜில்லா பஞ்சாயத்துக்கள் என
பரவலாக அறியப்படுகிறது. இவற்றுக்கு குறைந்தது 50 – 75 வரையான உறுப்பினர்கள் மக்களின்
வாக்களிப்பு மூலம் ஐந்து வருட
பதவிக் காலத்துக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். பதவிவழி
உறுப்பினர்களும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சித் துறைத் தலைவர்
இதன் நிர்வாக விடயங்களுக்கு தலைமைவகிப்பார்.
கிராமிய
மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல்,
மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை வகுத்தல், அவற்றை நிறைவேற்றுதல், விவசாயத்
துறையினை முன்னேற்றுவதற்கான உதவிகளை வழங்குதல், கிராமியமட்டத்தில்
பாடசாலைகளை அமைத்து அவற்றைப் பராமரித்தல்,
முதியோர் எழுத்தறிவை மேம்படுத்தும் திட்டங்களை வகுத்தல், நூலகங்களை செயற்படுத்தல், கிராமிய மட்டத்தில் வைத்தியசாலைகள்,
சுகாதார நிலையங்கள்
என்பவற்றை அமைத்தல், தொற்று நோய்களுக் கெதிரான
தடுப்பூசிகள் வழங்குதல், வீதிகள், பாலங்கள் போன்றவற்றினை அமைத்தல், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல், கைத்தொழிற்றுறை,
விவசாயத் தொழிற்றுறை
போன்றவற்றில் சிறிய ரக முதலீட்டாளர்களை
ஊக்குவித்தல் போன்றன மாவட்ட மட்ட
பஞ்சாயத்துக்களின் பிரதான செயற்பாடுகளாகும்.
மாவட்ட
மட்ட பஞ்சாயத்துக்கள் வரிவிதித்தல் மூலமாகவவும், மாநில அரசிடம் இருந்து
பெறும் உதவிகள் மூலமாகவும் தம்
நிதித் தோவைகளினை நிறைவேற்றிக் கொள்கின்றன.
பஞ்சாயத்து
முறையின் ஊடாக அதிகாரத்தினை பரவலாக்குவதற்கு
மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் பின்வரும் முக்கிய விடயங்களினை அவதானிக்க
முடிகிறது.
பஞ்சாயத்துக்கள்
உள்@ர் சுயாட்சி அரசாங்கம்
என அழைக்கப்படுகிறது. உள்@ர் சுயாட்சி
அரசாங்கம் என்பது ஓர் அதிகாரப்
பரவலாக்கல் முறையே ஆகும். உள்@ர் சுயாட்சி அரசாங்கம்
(Local
Self Government) என்பதில்
உள்@ர் (Local) என்பது நாட்டினது சிறியதோர்
பகுதியைக் குறிக்கிறது, சுய (Self) என்பது ஒருவரின் தனிப்பட்ட
ஆர்வத்தினைக் குறிக்கிறது, அரசாங்கம் (Government) என்பது
ஆளும் முறையினது தொகுப்பு அல்லது கருவியாகும். எனவே
உள்ள+ர் சுயாட்சி அரசாங்கம்
(Local Self Government) என்பது குறித்த ஓர்
பகுதியில் வசிப்போர் தம்மை ஆளுவதற்காக தம்மாலேயே
ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பாகும். இத்தகைய தாபனங்கள் மத்திய
அல்லது மாநில அரசின் சட்டங்கள்
மூலமாக உருவாக்கப்படுவதுடன் தமது அதிகாரப் பரப்புக்குள்
பயன்படுத்தத்தக்க அதிகாரங்களினைக் கொண்டிருக்கும்.
இது
சமுதாய அபிவிருத்திக்கான வாய்ப்பினையும் வழங்குகிறது. குறிப்பாக பொருளாதார விருத்தியினை பிரதானமாக கொண்டு அமைக்கப்பட்ட பஞ்சாயத்துக்கள்
மக்களால் கிராமிய மட்டத்தில் அடையாளப்படுத்தப்படும்
அபிவிருத்தித் திட்டங்களினை மேற்கொள்கின்றன. இதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்காக
ஒதுக்கப்படும் பணமானது பல்வேறு படிமுறைகளினைத்
தாண்டிச் செல்கையில் சுரண்டல்கள் இல்லாது போவதுடன் ஊழல்களும்
குறைவடைகிறது. அத்துடன் மத்திய அரசாங்கத்தின் பணியும்
குறைவடைகிறது.
பொதுவாக
பஞ்சாயத்து பிரதிநிதிகளை 500 - 600 மக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட
கிராமிய சபைகளே தெரிவு செய்கின்றன.
இவ் உறுப்பினர் தெரிவில் பெண்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் போன்பறௌரும் தமக்குரிய
பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை பஞ்சாயத்துக்கள் கொண்டுள்ளன. இதன் முலமாக மக்களின்
அரசியல் பங்குபற்றுதலும் குறித்த கிரமத்தில் வாழ்கின்ற
அனைத்து தரப்பு மக்களினதும் பிரதிநிதித்துவமும்
பாதுகாக்கப்படுகிறது.
எவ்வாறெனினும்
பஞ்சாயத்து முறையினில் பல்வேறு பாதகமான அம்சங்களும்
காணப்படவே செய்கின்றன. குறிப்பாக பஞ்சாயத்து நிறுவனங்கள் தாம் திட்டமிட்ட பணியினை
முன்னெடுத்துச் செல்வதில் நிதிப்பற்றாக் குறையினை எதிர் நோக்குவது பஞ்சாயத்து
முறையினது செயற்பாட்டினை முன்னெடுப்பதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. மாநில நிதி ஆணைக்
குழுக்கள் உரிய முறையில் இயங்காமைஇ
அவற்றின் ஆலோசனைகளுக்கு மாநில அரசுகள் உரிய
முக்கியத்;துவம் வழங்காமை போன்றன
பஞ்சாயத்து முறைமையில் நிதி நெருக்கடி ஏற்பட
பிரதான காரணமாகிறது.
அதே
போன்று பஞ்சாயத்தின் மூன்று அடுக்குகளிடையேயும் காணப்படும்
முறையற்ற தொடர்பு, அரசியல் சார்பு நிலை,
கிராம சபைகளிலும் பஞ்சாயத்து முறையிலும் காணப்படும் குடும்ப, குல, சாதி செல்வாக்கு
போன்றனவும் பஞ்சாயத்து முறையினது பிரதான குறைபாடுகளாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எவ்வாறெனினும்
இந்தியாவில் இன்றைய நிலையில் கிராமிய
பஞ்சாயத்துக்களும், தொகுதி மட்ட பஞ்சாயத்துகளும்
,மாவட்ட மட்ட பஞ்சாயத்துக்களுமாக ஏறக்குறைய
340,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து
அமைப்புக்கள் காணப்படுவதுடன் இவை மக்களால் தெரிவு
செய்யப்படும் பிரதிநிதிகளின் மிகப்பெரிய தாபனம் என்ற வகையில்
மக்களாட்சியைக் கட்டியெழுப்புவதில் பஞ்சாயத்துக்களுக்கு இந்திய அரசியலில் ஓர்
முக்கிய பங்குண்டு. எவ்வாறெனினும் பஞ்சாயத்து முறையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் பஞ்சாயத்துக்கள்
உருவாக்கப்பட்டதன் நோக்கத்தினை அடைந்து கொள்வதற்கு தடையாக
உள்ளது.
பஞ்சாயத்து
முறையில் காணப்படும் குறைபாடுகளைக் நீக்கும் வகையில் 2002ல் பிரதமரால் ஓர்
அமர்வு புது டில்லியில்
கூட்டப்பட்டது. இதில் நாடு பூராகவும்
இருந்து வந்த 1600 பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில்
பஞ்சாயத்து அமைப்புக்களை பலப்படுத்தும் வகையில் 15 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதுடன், பின்வருவன அவற்றுள் முக்கியமான பரிந்துரைகளாக விளங்கின, மாவட்ட,
கிராமிய அபிவிருத்தி
அமைப்பினை யும் மற்றும் அத்தகைய அமைப்புகளையும்
மாவட்ட மட்ட பஞ்சாயத்தின் கீழ்
கொண்டு வரல், மாநில அரசுகள்
மாநில நிதி ஆணைக் குழுவின்
பரிந்துரைகளை கட்டாயம் அமுல்ப்படுத்தல் வேண்டும், மத்திய அரசு பஞ்சாயத்து
அமைப்புகளுக்கு கடன்களை வழங்குதல் வேண்டும்,
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அறிவுரகளை வழங்குவதற்கு பஞ்சாயத்துக்கள் பஞ்சாயத்து திட்டமிடல் குழுக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்இ மத்திய அரசு பஞ்சாயத்து
பிரதிநிதிகளை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மேற்படி
பரிந்துரைகள் முறையாக செயற்படுத்தப்பட்டால் பஞ்சாயத்து முறையானது
ஓர் வெற்றிகரமான அதிகாரப் பரவலாக்கல் முறையாக அமையயும் என்பதுடன்,
அதிகாரப் பரவலாக்கல் முயற்சியில் ஏனைய நாடுகளுக்கு இந்தியாவினது
பஞ்சாயத்து முறையானது சிறந்த படிப்பினையாகவும் அமையும்
என்பதில் ஐயமில்லை.
2013.07.05
Comments
Post a Comment