பிரித்தானிய பாராளுமன்றம் இன்றைய கால கட்டத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்றி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து நாட்டை சிறப்பாக நிருவாகிப்பதற்கு நிருவாகத் துறைக்கு பக்கபலமாய் சட்டத்துறை காணப்படுகிறது . சட்டத்துறையினது வரலாறு நீண்டதாயினும் பிரதிநிதித்துவ சட்டத் துறையின் வரலாறு குறுகியதே . எவ்வாறாயினும் தற்போதுள்ள சட்ட மன்றங்கள் யாவற்றுடனும் ஒப்பிடும் போது பிரித்தானிய சட்ட மன்றம் நீண்ட வரலாற்றினை உடையது . தh ய் பாராளுமன்றம் என கூறக்கூடியளவுக்கு தற்போதுள்ள சட்டமன்றங்கள் யாவற்றுக்கும் முன்னோடியாய் விளங்குகிறது . பிரித்தானியாவில் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதற்கான ஒரு சபை காணப்பட்டது . இச்சபையில் குல மரபுக் குழுக்களின் முக்கியஸ்தர்கள் , புத்திசாலிகள் போன்றோர் காணப்பட்டனர் . மன்னன...
மனித உரிமைகள் எனும் விடயமானது இன்றைய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றதொரு விடயமாக உள்ளது. பல்வேறு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோரும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்போரும் தமக்கேற்றாற் போல் மனித உரிமை விடயங்களை வடிவமைப்புச் செய்துள்ளனர். அதே வேளை மனித உரிமை என்பது சமூகத்தோடு இணைந்து வளர்ச்சியுற்று இன்றைய நிலையினை அடைந்துள்ளது. இன்றும் மனிதவுரிமைகள் எனும் விடயமானது சமூகத்துடன் இணைந்தே அசைவுற்றுக் கொண்டுள்ளது. இதனால் மனித உரிமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதோர் விடயமாகவுள்ளது. இதன் காரணமாக அறிஞர்கள் மனித உரிமைகளுக்கு வேறுபட்ட வரைவிலக்கணத்தினை முன்வைக்கின்றனர். மனித உரிமை எனும் விடயத்தை விளக்க முற்படுகையில் மனிதன், உரிமை எனும் இரு விடயத்தினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். மனிதன் என்கின்ற பதமானது தேசியம், வாழிடம், பால், தேசம், இனம், நிறம், மதம், மொழி அல்லது இவை போன்ற வேறு நிலைகளைக் கடந்து இப் பூகோளத்தில் வாழும் அனைவரையும் குறிக்கிறது. மனிதர்கள் யாவரும் வேறுபாடு அற்றவர்கள் என்பதே இதன் உட்கிடக்கையாகும். ஆயினும் உரிமைகள் எனும் பதத்தினை இவ்வாறு இலகுவாக வரையறை...
15ம் நூற்றாண்டில் அதிகாரமும் பணபலமும் இருந்த பிரபுக்கள் உள்நாட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து தேசம் சீர்குலைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையிலிருந்து இங்கிலாந்தை மீட்க திறமை வாய்ந்த ஒரு அரசன் தேவை என மக்கள் உணர்ந்திருந்தனர். இவ்வேளையிலேயே தியூடர் வம்சத்தைச் சேர்ந்த VIIம் ஹென்றி சிம்மாசனம் ஏறினான். இவ்வரசன் முடியாட்சியை கொண்ட தேசிய அரசாக இங்கிலாந்தை பலப்படுத்த பல பணிகளை மேற் கொண்டான். மேலும் வாசிக்க...
Comments
Post a Comment