பிரித்தானிய பாராளுமன்றம்
பிரித்தானிய பாராளுமன்றம் இன்றைய கால கட்டத்தில் ஒரு நாட்டுக்கு தேவையான சட்டத்தை இயற்றி நிர்வாகத்தை மேற்கொள்வதற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து நாட்டை சிறப்பாக நிருவாகிப்பதற்கு நிருவாகத் துறைக்கு பக்கபலமாய் சட்டத்துறை காணப்படுகிறது . சட்டத்துறையினது வரலாறு நீண்டதாயினும் பிரதிநிதித்துவ சட்டத் துறையின் வரலாறு குறுகியதே . எவ்வாறாயினும் தற்போதுள்ள சட்ட மன்றங்கள் யாவற்றுடனும் ஒப்பிடும் போது பிரித்தானிய சட்ட மன்றம் நீண்ட வரலாற்றினை உடையது . தh ய் பாராளுமன்றம் என கூறக்கூடியளவுக்கு தற்போதுள்ள சட்டமன்றங்கள் யாவற்றுக்கும் முன்னோடியாய் விளங்குகிறது . பிரித்தானியாவில் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் மன்னனுக்கு ஆலோசனை கூறுவதற்கான ஒரு சபை காணப்பட்டது . இச்சபையில் குல மரபுக் குழுக்களின் முக்கியஸ்தர்கள் , புத்திசாலிகள் போன்றோர் காணப்பட்டனர் . மன்னன...
Comments
Post a Comment