இந்திய சமஸ்டி எதிர்நோக்கும் சவால்கள்.

இந்திய சமஸ்டி எதிர்நோக்கும் சவால்கள்


     'நாட்டின் ஒற்றுமை அதிகாரத்தினை  மாநில உரிமைகளோடு இணைக்கும் செயற்பாடே சமஸ்டி" என யூ.ஏ.டைசி குறிப்பிடுகின்றாH. சமஸ்டி என்பது ஆங்கிலத்தில் 'குநனநசயடளைஅ" என்று அழைக்கப்படுகின்றது. இது 'குழநனரள" எனும் இலத்தீன் மொழி சொல்லில் இருந்து தோன்றியது.இதன் பொருள் நட்பு நாடுகளுக்கிடையிலான கூட்டு என்பதாகும். இவ்வாறு நட்பு நாடுகளுக்கிடையிலான கூட்டானது மாநிலங்கள் உடன்பாட்டுடன் இணைந்து செயற்பட முன்வருகின்ற போது உருவாகின்றது. அரசுகள் உடன்பாடு காணப்படுகின்ற விடயங்களில் கூட்டாகவூம் ஏனைய விடயங்களில் சுதந்திரத்துடனும் செயற்பட முன்வருகின்றன. இதனால் மாநில அரசுகளின் தனித்துவம் பேணப்படுவதுடன் மாநிலங்கள் பல ஒன்றிணைவதன் மூலமாக பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 'மத்திய அரசு ஒன்றின் தலைமையின் கீழ் மாநில அரசுகள் தம் சுதந்திரம் தனித்துவம் என்பவற்றை இழக்காமல் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொண்டு பொது நன்மையின் அடிப்படையில் ஒரு யாப்பின் கீழ் ஒன்றிணைக்கப்படுவதே சமஸ்டி" என வரையறை செய்யலாம்.
     பல தனிப்பட்ட அரசுகள் ஒரு கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேருவதே   சமஸ்டி என ஹமில்டன் என்பவH கூறுகின்றாH. இதுவரை காலமும் சமஸ்டி பற்றி விளக்கமளித்தவகள் பல சிறு சிறு அரசுகள் அருகருகே தொடHச்சியான நிலப்பரப்பில் பல தனியான அரசுகள் தமது இலக்குகளை கருத்தில் கொண்டு ஒரு மத்திய அதிகாரத்தின் கீழ் ஒன்று சேHவதனாலேயே சமஸ்டி அரசாங்க முறை உருவானது என கூறப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களில் சமஸ்டி  அரசாங்க முறை உருவாக்கப்பட்டதற்கு ஏற்கனவே கூறப்பட்டதற்கு மேலதிகமாக இன்னொரு விளக்கமும் உருவாகியூள்ளது. ஒரு ஒற்றையாட்சி அரசாங்க முறையில் காணப்படும் பல்லினத் தன்மையினால் அதாவது வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவHகளின் அபிலாசைகளையூம் தனித்துவத்தையூம் பேணுவதற்காக பிராந்திய அரசுகள் உருவாக்கப்படுவதும்  அவற்றுக்கு தத்தமது இனஇ மதஇ கலாசாரஇ அடையாளம்இ அடிப்படையில் சட்டதிட்டத்தை உருவாக்கி செயற்பட அதிகாரம் வழங்கப்படுவதன் ஊடாகவூம் உலகில் சமஸ்டி அரசாங்க முறை உருவானதாக குறிப்பிடப்படுகின்றது.
     இதன்படி சமஸ்டி இரு வகைகளில் உருவாகலாம். முதலாவது பலம்மிக்க பல அரசுகள் ஒன்றிணைவது மற்றையது ஒரு நாட்டிலுள்ள பல பிராந்தியங்கள் ஒன்றிணைவது. இதில் இந்தியாவின் சமஸ்டி இரண்டாவதாக கூறப்பட்ட வகையில் தோன்றியதாகும். அந்த வகையில் பிரித்தானியH இந்தியாவைக் கைப்பற்ற முன்னும் இந்தியா பல மன்னHகளின் கீழ் இருந்தது. பிரித்தானியரின் ஆளுகையின் போதும் சுதந்திரத்தின் பின்னரும் இந்தியாவில் சில பிராந்தியங்களில் இந்நிலை தொடHந்தது. இதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட யாப்பானது இப்பிராந்தியங்களை இணைத்து ஒரு நாடாக்குவதற்கே இந்தியாவில் சமஸ்டி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு இணைக்கப்படுவதற்கு பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் இந்திய மக்களிடையே விதைக்கப்பட்ட தேசியவாதமே காரணமாகியது.
     இவ்வாறாக தோற்றம் பெற்ற இந்தியாவின் சமஸ்டி அமெரிக்காஇ கனடாஇ அவூஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படும் சமஸ்டி பண்புகள் சிலவற்றை வெளிப்படுத்திய போதும் சில சந்தHப்பங்களில் சமஸ்டி போன்று அல்லாது செயற்படும் தன்மை கொண்டதாகவூம் காணப்படுகின்றது. அரசியலமைப்பு மன்றத்தில் இந்திய அரசியல்யாப்பு வரைவூக் குழுவினது தலைவராக விளங்கிய டாக்டH அம்பேத்கH 'அவசரகால நிலைமைகளில் யாப்பினது சமஸ்டியாட்சி இயல்புஇ ஒற்றையாட்சித் தன்மையைப் பெறும்" என்று கூறியமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். எனவே இவ்வாறான இந்திய சமஸ்டி எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நேக்குவோம்.
     இந்தியாவின் சமஸ்டியானது குறைச் சமஸ்டியாக உள்ள அதே வேளை இந்தியா மொழிவழியான மாநிலங்களைக் கொண்டதாகும். அதாவது அங்கு மொழி ரீதியாகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்டு இருப்பினும் ஒவ்வொரு மாநிலத்திலும் சமப்படுத்த முடியாத பல்லினத்தன்மை கொண்ட மக்கள் வாழ்கின்றனர். வேற்றுமைக்குள் ஒற்றுமை காண்பதே சமஸ்டி எனக் கூறப்பட்டாலும் அங்கு வாழ்கின்ற பல்வேறு சமுகத்தவரின் எதிர் பார்ப்பினை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அங்கு மாநிலப்பிரிப்பு செய்யப்படவில்லை. அடிக்கடி ஏற்படுகின்ற இன மோதலும்(குஜராத் இந்து-முஸ்லிம் கலவரம்) மாநிலப் பிரிப்பு பற்றிய கோரிக்கைகளும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் விளைவாகவே வெவ்வேறு காலப்பகுதிகளில் புதிய மாநிலங்கள் பல தோற்றுவிக்கப்பட்டன.(1987இல் அஸ்ஸாம்இ 2000இல் சத்திஸ்கர்) இதனால் இந்தியச் சமஸ்டி அவ்வப்போது சவாலுக்கு உற்படுத்தப்படுகிறது.
     ஒவ்வொரு மாநிலமும் தமது தனித்துவத்தையூம் பாதுகாப்பையூம் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சமஸ்டியில் இணைகின்றன. இதனால் அம்மாநிலங்கள் அளவிலும் மக்கள் தொகையிலும் வேறுபாடு கொண்டதாக இருப்பினும் அவை சமமாக மதிக்கப்படுதல் வேண்டும். இதனாலேயே சமஸ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகளில் இரண்டாம் மன்றில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்யஇ ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரதிநிதிகள் சமமாக தெரிவூ செய்யப்படுகின்றனர். ஆயினும் இவ் அரசியல் சமத்துவம் எனும் சிந்தனை இந்தியாவில் பின்பற்றப்படுவதில்லை. இங்கு மாநிலங்களவையான இராஜிய சபாவில் மாநிலங்கள் கொண்டுள்ள மக்கள் தொகை மாநிலங்களின் பரப்பளவூ என்பவற்றுக்கு ஏற்ப சில மாநிலங்களில் இராஜிய சபாவிற்கு ஒரு பிரதிநிதி(மணிப்பூர்இ மீசோரம்) தெரிவூ செய்யப்படும் அதே வேளை 31 பிரதிநிதிகள்(உத்தரபிரதேசம்) தெரிவூ செய்யப்படும் மாநிலமும் உள்ளது.
     மாநிலங்களவையில் சமத்துவம் பேணப்படாமை ஒரு பக்கம் இருக்க அங்குள்ள மாநிலங்கள் சிலவற்றுக்கு மத்திய அரசு விசேட சலுகைகளையூம் வழங்கியூள்ளது. அதாவது காஷ்மீர் மாநிலமானது தனியான அரசியலமைப்பினைக் கொண்டிருக்கும் அதேவேளை மத்திய அரசு இயற்றும் இராணுவம்இ தகவல் தொடர்புஇ வெளியூறவூ போன்றன தவிர்ந்த ஏனைய சட்டங்கள் காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட அம்மாநிலத்தின் அங்கிகாரம் அவசியம். ஆயினும் ஏனைய மாநிலங்களுக்கு இவ்வூரிமை வழங்கப்படவில்லை. காஷ்மீர் பிரிந்து செல்வதை தடுக்கவே இவ் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பினும் அது ஏனைய மாநிலங்களின் பிரிவினைக் கோரிக்கைக்கு ஏதுவாய் அமைகிறது.  இந்நிலையானது மாநிலங்களிடையே தாம் புறக்கணிக்கப் படுகிறௌம் எனும் மன நிலையை ஏற்படுத்துமிடத்து அது சமஸ்டியின் தோல்விக்கு காரணமாகலாம்.
     அவ்வாறே மத்திய அரசானது மாநில அரசுகளுக்கு சமமான நிதிப் பகிர்வினை மேற்கொள்வதுமில்லை. ஒரு மாநில அரசு சரியாக இயங்குவதாயின் நிதி மிகவூம் அவசியமாகும். ஆனால் வருமான வரிஇ நிதி போன்ற அதிகாரங்களை தன்வசம் வைத்திருக்கும் மத்திய அரசானது நிதியை மாநிலங்களுக்க பகிர்வதில் சிக்கல்களை எதிர்நோக்குவதுடன் யாப்பினது 360ம் விதிப்படி நிதி அவசரகால நிலைமையின் போது மாநிலங்களுக்குரிய நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு செய்யக்கூடிய இயலுமையை கொண்டுள்ளமையூம் நிதி விடயங்களில் மாநில அரசுகள் சமமாக கவனிக்கப்படாமைக்கு காரணமாகிறது. இந்நிலை சமமாக மதிக்கப்படுவோம் என்ற எண்ணத்தினால் ஒன்றினைத்து வைக்கப்பட்டுள்ள சமஸ்டி அலகுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதும் இந்திய சமஸ்டி எதிர் நோக்கும் சவாலாய் அமைகிறது.
     மேலும் மாநில அரசுகளை விட மத்திய அரசானது அதிகளவூ அதிகாரங்களை கொண்டுள்ளமையானது மாநிலங்கள் தம் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு மத்தியூடன் இணைந்திருப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாது செய்கிறது. மாநிலங்களை விட மத்திய அரசு அதிக அதிகாரங்களை பெற்றிருத்தல்இ அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது மத்திய அரசின் அதிகாரங்களே மேலோங்கி நிற்றல்இ மத்திய அரசின் அதிகாரங்களிலும் மாநில அரசுகள் சட்டமியற்ற முடிதல்இ அவசரகால நிலையை பிறப்பித்து மாநில அரசைக் கலைப்பதுடன் அவ்வரசுகளை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் என்பன மத்திய அரசினது அதீத பலத்தினையே வெளிப்படுத்துகிறது. இந்நிலையானது மாநில அரசுகள் தொடர்ந்தும் சமஸ்டியில் நிலைத்திருப்பதற்கான விருப்பத்தை இல்லாமல் செய்கிறது.
     “நிலப்பரப்பில் அதிக இடைவெளிகள் இருப்பின் கவனமின்மையூம் ஒற்றுமையின்மையூம் ஏற்படும்இ பொது பாதுகாப்புஇ பொருளாதார முன்னேற்றமும் பாதிக்கப்படும்.” என சமஸ்டி பற்றி பேராசிரியர் ‘புடைபாசளைவ’ (கில்கிறைஸ்ட்) கூறுகிறார். இப்பிரச்சினையை மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவிலும் காணமுடியூம். இந்நிலை மத்திய அரசானது மாநில அரசுகளினை தொடர்ந்து கண்காணிப்பு செய்ய முடியாத நிலையையூம் பொதுப்பாதுகாப்புஇ சமமான பொருளாதார முன்னேற்றம் என்பனவற்றினை சமஸ்டி அலகுகளுக்கிடையே ஏற்படுத்துகிறது. இந்நிலையே இமாலய பிரதேசத்தைக் கடந்து அம் மலைச் சாரலில் அமைந்துள்ள காஷ்மீர் மாநிலத்திலும் கணப்படுகிறது.
     மாநிலஇ யூ+னியன் பிரதேசங்கள் மத்தியில் நடுவண் அரசினால்  பொது பாதுகாப்புஇ பொருளாதார முன்னேற்றம் என்பனவற்றை உறுதி செய்ய முடியாத போது அங்கு வன்முறைகள் ஏற்படுகிறது. இதுவே பின்னர் தீவிரவாதக் குழுக்களின் பிரிவினைவாதக் கோரிக்கைக்கும் வாய்ப்பாய் அமைகிறது. எனவே மேற்கு வங்காளம்இ ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள தீவிரவாத குழுக்களின் செயற்பாடும் இந்திய சமஸ்டி முறைக்கு சவாலாய் உள்ளது. இத் தீவிரவாத குழுக்களின் செயற்பாட்டுக்கு வறுமையூம் ஒரு காரணியாகும். ஆயினும் சமஸ்டி முறையின் வெற்றிக்கு வளர்ச்சியடைந்த பொருளாதாரமும் அவசியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
     உள்நாட்டில் இயங்கும் தீவிரவாத குழுக்களின் செயற்பாடும் சமஸ்டி முறைக்கு சவாலாய் அமையூம் அதே வேளை இந்திய அரசாங்கத்தின் வெளியூற கொள்கைகளும் சமஸ்டிக்கு சவால் விடுமளவூக்கு பூதாகரமான  சந்தர்ப்பங்களும் உண்டு. அந்தவகையில் இந்திய அரசு இலங்கை தொடர்பிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பிலும் கடைப்பிடித்து வந்த கொள்கைகள் தமிழ்நாடு மாநிலத்தில் பாரிய எதிர்ப்பலையைக் கிளப்பியது. இதனால் அங்கிருந்த அரசியல் கட்சிகள் சிலவூம் அரசில் இயக்கங்களும் தமிழ் நாடு தனிநாடாக பிரிந்து செல்வது பற்றிப் பேசியமை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
     இவை எல்லாவற்றையூம் விட இந்திய சமஸ்டிக்கு பாரிய சவால் விடக்கூடிய விடயம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாகும். அந்த வகையில் இந்தியாவின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் அரசுகளான பாகிஸ்தான்இ சீனா என்பன இந்தியாவின் சில பகுதிகளை தமக்கு உரிமை கோருவதுடன் 1962இ 1965இ 1971இ 1975 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான்இ இந்தியா-சீனா யூத்தத்தின் போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையூம் மேற்கொண்டன. தற்போதும் காஷ்மீரின் ஒரு பகுதியை  பாகிஸ்தானும் அருணாசலப் பிரதேசத்தின் 90இ000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதிக்கு சீனாவூம் உரிமை கோருவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் “கில் ஜித் பல்திஸ்தான்” எனும் பகுதியில் சீனாஇ பாகிஸ்தான் இராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இப்பகுதியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியூள்ளன.
     மத்திய அரசு ஒன்றின் கீழ் மாநில அரசுகள் நிலைத்திருப்பதற்கான விருப்பத்தைக் கொண்டிருப்பதே சமஸ்டியின் வெற்றிக்கு அவசியமாகும். ஆயினும் மாநிலங்கள் மத்திய அரசினால் சரிவர கவணிக்கப்படாமைஇ மத்திய அரசு மாநிலங்களைவிட அதிக அதிகாரம் கொண்டுள்ளமைஇ உள்நாட்டுக் குழப்பமும் அதற்கு காரணமான வறுமை உள்ளிட்ட பிரச்சினைகள் மத்திய அரசினால் சரிவர தீர்க்கப்படாமைஇ பாரிய நிலப் பரப்பினைக் கொண்ட சமஸ்டியாக இந்தியா காணப்படல்இ மத்திய அரசின் கொள்கைகளால் சில மாநிலங்கள் புறக்கணிக்கப்படல் என்பன போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளும் இந்தியாவூக்கு அண்மையில் உள்ள நாடுகளில் இருந்து வருகின்ற ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களும் இந்திய சமஸ்டிக்கு அச்சுறுத்தல் விடுகின்ற காரணிகளாக அமைகின்றன.
      இந்தியச் சமஸ்டியானது எதிர் நோக்குகின்ற மேற்படியான பிரச்சினைகளால் சமஸ்டியானது பல்வேறு சவால்களுக்கு உற்பட்டிருந்தாலும் யாப்பினது நெகிழாத் தன்மை மாநிலங்கள் தனி நாடாக பிரிவதனைத் தடுக்க உதவூவதோடுஇ ஆளுமை மிக்க தலைமைத்துவமானது மாநிலங்களுக்கு இடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை சமரசம் செய்து வைப்பதும்இ தௌpவான தீர்மானம் எடுக்கும் தன்மையூம்இ இந்திய மக்களிடையே காணப்படுகின்ற தேசியவாத உணர்வூம் இந்தியச் சமஸ்டியானது பல சவால்களுக்கு மத்தியிலும் நிலைத்திருக்க உதவூகிறது. 


Comments

Popular posts from this blog

பிரித்தானிய பாராளுமன்றம்

மனித உரிமைகள்

ஐரோப்பிய தேசிய அரசுகளின் தோற்றம் - வரலாறு